லலித் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
’ஐ.பி.எல்’ கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த லலித்மோடி, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், அவர் மீது, 2012ஆம் ஆண்டு டிசம்பரில் வரி ஏய்ப்பு, பணப் பரிவர்த்தனை மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
லலித்மோடி, இந்தியாவில் இருந்து தப்பி, லண்டனில் பதுங்கினார். 3 ஆண்டுகளாக அவர் அங்கு தலைமறைவாக உள்ளார். லலித் மோடியின் பாஸ்போர்ட்டை இந்தியா முடக்கி வைத்துள்ளது.
அவரைநாடு கடத்த வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சட்டரீதியிலான ஆலோசனை நடத்தி வருவதாகவும், வழிகள் உள்ளதா என ஆராய்ந்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.