இந்திய கிரிக்கெட் அணி வரும் சீசனில் உள்நாட்டிலேயே 13 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்திய அணி உள்நாட்டிலேயே விளையாடும் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்துடனான தொடருடன் தொடங்குகிறது. இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் மோதவுள்ளன.
இதையடுத்து இங்கிலாந்துடன் நடைபெறும் தொடரில் 5 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் நடைபெறும்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாத சீசனில் இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அப்போது நான்கு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.
அடுத்ததாக வங்கதேச அனி இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது.
ராஜ்கோட், விசாகப்பட்டனம், புனே, தர்மசாலா, ராஞ்சி, இந்தூர் ஆகிய நகரங்களில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.