Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 விக்கெட்களை இழந்தாலும் அதிரடி காட்டும் இந்திய பேட்ஸ்மேன்கள்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:07 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு  செய்து ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதலில் பேட்டிங்  இறங்கிய இந்திய் அணி ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் சேர்த்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகார் தவான் 13 ரன்களிலும் பிருத்வி ஷா 49 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்த வந்த சஞ்சு சாம்சன் 46 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் தற்போது மனிஷ் பாண்டே 10 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 22 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். 23 ஓவர்கள் முடிவில் இந்தியா 147 ரன்கள் சேர்த்துள்ளது.
  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியைக் காப்பி அடிக்கிறார் ஷுப்மன் கில்… முன்னாள் வீரர் விமர்சனம்!

திடீரென ரசிகர்களை இழக்கும் ஆர் சி பி அணி… பின்னணி என்ன?

இன்றைய போட்டியில் பண்ட் கீப்பிங் செய்வாரா?.. வெளியான தகவல்!

மீண்டும் ஒரு மைல்கல் சாதனை… மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் அற்புதம் நிகழ்த்துவாரா?

அப்பா பந்துவீச, மகன் சிக்ஸர் அடிக்க… ஆஹா அற்புத தருணம்…!

அடுத்த கட்டுரையில்
Show comments