Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி 20 உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்! – அட்டவணை வெளியிட்ட ஐசிசி!

Advertiesment
டி 20 உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்! – அட்டவணை வெளியிட்ட ஐசிசி!
, செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (11:00 IST)
அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டி அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முக்கியமான அணிகள் ஆடும் சூப்பர் 12 குரூப் 1 மற்றும் 2 க்கான போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டு அரையிறுதி போட்டிகள் நவம்பர் 10 மற்றும் 11லும், இறுதிபோட்டி நவம்பர் 14ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளில் சூப்பர்12 குரூப் 2ல் அக்டோபர் 24ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ள உள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக டெஸ்ட் தொடர்கள் நடைபெறாத நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் மட்டுமே மோதிக் கொள்கின்றன. இதனால் இந்த போட்டி ரசிகர்களால் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.icc-cricket.com/news/2210270

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னால் தூங்க முடியவில்லை… குடும்பத்தை நினைத்து கண்ணீர்விடும் ரஷித் கான்!