Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்கள்… அதன் பிறகே செல்ஃபி- ஷகீன் அப்ரிடியின் சபதம்!

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (07:22 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடர் லீக் போட்டி இன்று மதியம் அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியைக் காண ஒரு லட்சம் இருக்கைகள் கொண்ட மைதானத்தின் அரங்கம் முழுவதும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரிடம் பத்திரிக்கையாளர்கள் சிலர் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்ட போது அவர் மறுத்துள்ளாரம்.

மேலும் அவர் “இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்களை எடுத்த பின்னர்தான் செல்ஃபி” எனவும் கூறியுள்ளாராம். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வரும் இந்திய முன்வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை கைப்பற்றி அவர்களை திணறடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது இந்தியா. இந்த தொடரில் இரு போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் சமபலத்தோடு இந்த போட்டியில் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

அடுத்த கட்டுரையில்
Show comments