வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் 2 வது நாளில் இந்தியா சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறது
இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரோஸ்டன் ச்சேஸ்ஸின் அபார சதத்தால் 311 ரன்களைக் குவித்து ஆல் அவுட் ஆனது.
அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரன் ராகுல் 4 ரன்னிலும் புஜாரா 10 ரன்களிலும் ஆட்டமிழந்த போதும் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 70 ரன்களை சேர்த்தார்.
அதையடுத்து கேப்டன் கோலியோடு ஜோடி சேர்ந்த ரஹானே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். கேப்டன் கோலி 45 ரன்கள் சேர்த்து ஹோல்டர் பந்தில் தன் விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ரிஷப் பாண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் கண்டார்.
2வது ஆட்டநாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸின் ஸ்கோரை விட இந்தியா 3 ரன்களே பின் தங்கியுள்ளது. கைவசம் இன்னும் 6 விக்கெட்கள் உள்ள நிலையில் இந்தியா முதல் இன்னிங்ஸில் வலுவான ஸ்கோர் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரிஷப் பாண்ட் 85 ரன்களோடும் ரஹானே 75 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.