Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

vinoth
திங்கள், 23 டிசம்பர் 2024 (12:52 IST)
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐசிசிக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் பணபலம் மிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசியைத் தன்பக்கம் சாய்த்தது. இதனால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை தவிர்க்க தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள ’துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில்’ நடக்கவுள்ளது. லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் அந்த மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments