ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிவைப் பட்டியலை அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் சங்கம். அதில் ஆஸ்திரேலியா அணி 124 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா அணி 109 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தொடர்ச்சியாக பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது, இந்திய அணி மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு இறங்கியுள்ளதும், தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.