Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவா? இந்தியாவா? இன்று கடைசி மோதல்! – கோப்பையை வெல்வது யார்?

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (08:37 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் கடைசி நாளான இன்று யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் ஆஸ்திரேலியா குவித்த நிலையில் களமிறங்கிய இந்திய அணி 296 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை குவித்த நிலையில் இந்திய அணியின் வெற்றி இலக்கு 444 ரன்களாக உயர்ந்தது.

நேற்று இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை இந்தியா தொடங்கிய நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே எடுத்துள்ளது. மேலும் சுப்மன் கில் கேட்ச் அவுட் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.



இன்று நடைபெற உள்ள இறுதி நாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற 280 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா மீதமுள்ள இந்தியாவின் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி விட்டால் வெற்றி பெற்று விடும். இதனால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி விராட் கோலியும், ரஹானேவும் விக்கெட் இழக்காமல் விளையாடி வருவதுடன், நல்ல பார்ட்னஷிப்பிலும் உள்ளனர். விக்கெட் இழக்காமல் நின்று விளையாடினால் வெற்றி அல்லது ட்ரா செய்ய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments