Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப் போட்டியில் மோதும் இந்தியா & நியுசிலாந்து… இரு அணிகளும் பயணம் செய்த தூரம் எவ்வளவு தெரியுமா?

vinoth
வெள்ளி, 7 மார்ச் 2025 (09:58 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று சொன்னதால் இந்திய அணி நடக்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன.

இதனால் இந்திய அணியோடு இந்த தொடரில் விளையாடிய பாகிஸ்தான், பங்களாதேஷ், நியுசிலாந்து மற்றும ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பாகிஸ்தானில் இருந்து  துபாய்க்கு வந்து இந்தியாவோடு விளையாடி பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று மற்ற போட்டிகளில் விளையாடின. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மேல் விமர்சனங்களும், இந்த ஹைபிரிட் மாடல் இந்தியாவுக்கு சாதகமான அம்சம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே வரும் ஞாயிற்றுக் கிழமை இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி ஒரு கிலோ மீட்டர் கூட பயணம் செய்யவில்லை. அதே நேரம் நியுசிலாந்து அணி கிட்டத்தட்ட 7048 கிமீ தூரம் பயணம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் பந்திலேயே விக்கெட்.. பேட் கம்மின்ஸ் பந்தில் கருண் நாயர் அவுட்.

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments