Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடர்; இன்று இறுதி போட்டி! – வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா?

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (09:41 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடரின் 5வது மற்றும் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.



உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில் அவர்களை மீண்டும் புத்துணர்ச்சி ஆக்கும் விதமாக இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அறிவிக்கப்பட்டது.

இதில் முதல் போட்டியிலேயே வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன் தொடரையும் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று 5வது இறுதி டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி இறுதி போட்டி என்பதால் இந்தியா அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி கணக்குடன் போட்டியை நிறைவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். போட்டிகளின் இறுதியில் ரின்கு சிங் இறங்கி அடிக்கும் சிக்ஸர், பவுண்டரிகளும், வின்னிங் ஷாட்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த மேஜிக் இன்றைய போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments