Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறுக்கிட்ட மழை: Ind vs Aus 2 ஆம் நாள் ஆட்டம் முடிவு!

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (13:26 IST)
2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது. 

 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய பந்து வீச்சாளர்களில் மிக அபாரமாக பந்துவீசிய தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரரான ஷ்ப்மன் கில்லை 7 ரன்களில் பறிகொடுத்தது. 
 
அதன் பின்னர் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவும் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்து தடுமாறிய போது, மழைக் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. 
 
மேலும் போட்டி ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் லயன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த போட்டியும் விளையாடவில்லை… ஆனாலும் ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹிட்மேன்!

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments