Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸ் அடிக்கும் ஆசையில் விக்கெட்டை இழந்த ரோஹித் ஷர்மா! கவாஸ்கர் அதிருப்தி!

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (11:19 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா சிக்ஸ் அடிக்கும் ஆசையில் தனது விக்கெட்டை இழந்ததை சுனில் கவாஸ்கர் கண்டித்துள்ளார்.

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆன நிலையில் தனது பேட்டிங்கை தொடங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரரான ஷ்ப்மன் கில்லை 7 ரன்களில் பறிகொடுத்தது. அதன் பின்னர் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவும் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்து தடுமாறிய போது, நிதானமான போக்கை கடைபிடித்து ரஹானேவும், புஜாராவும் தடுப்பாட்டம் ஆடினர். இந்நிலையில் மழைக் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை இந்திய அணி 62 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்நிலையில் அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரோஹித் ஷர்மா லயன் பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு, கேட்ச் கொடுத்து அவ்ட் ஆனார். இதுபற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘ ஏன் இப்படி ஒரு ஷாட்டை ஆடினீர்கள். லாங் ஆன், டீப் ஸ்கொயர் லெக்கில் ஃபீல்டர்கள் இருக்கிறார்கள். பொறுப்பில்லாத ஷாட். சில பந்துகளுக்கு முன்னர்தான் பவுண்டரி அடித்தீர்கள். நீங்கள் ஒரு மூத்த வீரர். தேவையில்லாத ஷாட்டால் விக்கெட்டை தூக்கிக் கொடுத்துவிட்டார்.’ எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?

PPL 2! வேதாந்த் பரத்வாஜ் அபார ஆட்டம்! ஜெனித் யானம் ராயல்ஸ் த்ரில் வெற்றி

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments