அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் குறித்து பேசிய சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் தான் கூல்ட்ரிங்ஸ் பாட்டில் தூக்கியது குறித்து பேசியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் பரபரப்புடன் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு சீஸனிலும் மாஸ் காட்டும் சிஎஸ்கே இந்த முறை மிகவும் பலவீனமடைந்து தடவரிசையில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஜகதீசன், இம்ரான் தாஹிர் உள்ளிட்ட சிலர் இன்னமும் 11 அணியில் இறக்கப்படாமல் உள்ளது குறித்து தங்களது வேதனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் யூட்யூப் மூலமாக கிரிக்கெட் வீரர்களுடன் நடத்தும் பேட்டியில் சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் “சென்னை அணி ரசிகர்கள் மிகவும் அன்பானவர்கள். யார் விளையாடினாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். டூ ப்ளஸிஸ் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர். ஆனால் இதற்கு முந்தைய சில இன்னிங்ஸில் அவர் 11 அணியில் இறக்கப்படாமல் கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை தூக்கி கொண்டு ஓடுவதை பார்க்கவே வருத்தமாக இருந்தது. அவர் அன்று எவ்வளவு வேதனை பட்டிருப்பார் என்பதை இன்று நான் உணர்கிறேன். எனக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.