Publish Date: Wed, 02 Jun 2021 (11:36 IST)
Updated Date: Wed, 02 Jun 2021 (11:41 IST)
எதிர்வரும் உலக கோப்பை போட்டிகளில் நடப்பு நிலையை விட அதிக அணிகள் பங்கேற்க செய்ய ஐசிசி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐசிசி என்னும் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் உலக கோப்பை போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டில் முக்கியமான போட்டியாக உள்ளது. வழக்கமாக ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் 10 அணிகளும், டி 20 உலக கோப்பை போட்டிகளில் 12 அணிகளும் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் இனி வரும் காலங்களில் நடைபெறும் உலக கோப்பை போட்டிகளில் அணிகளை அதிகப்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 50 ஓவர் போட்டிகளில் 14 அணிகளும், டி20 போட்டிகளில் 20 அணிகளும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.