Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

vinoth
வியாழன், 17 ஜூலை 2025 (08:22 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த  டெஸ்ட் போட்டி பரபரப்பாக முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில் இங்கிலாந்து அணி அபாரமாக பந்துவீசி போட்டியை வென்றது.

கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா வெற்றிக்காக தனியாளாகப் போராடினார். அவருக்கு உதவியாக கீழ்வரிசை பேட்ஸ்மேன்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரும் போராடினர். ஆனால் இந்த போட்டியை இந்திய அணியால் வெற்றி பெறமுடியவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டும் இணைந்து 90 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடித்தனர். இந்த போட்டியில் கடைசி விக்கெட்டாக சிராஜ் பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து மிக மெதுவாக பந்துவீசியதாக ஐசிசி அவ்வணிக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதித்துள்ளது. முன்னதாக வேண்டுமென்றே போட்டியைத் தாமதப்படுத்தியதாக இங்கிலாந்து அணி வீரர்களை கோபமாக திட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments