Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2028 ஒலிம்பிக்கில் இணைகிறது கிரிக்கெட்?? – ஐசிசி பேச்சுவார்த்தை

Advertiesment
2028 ஒலிம்பிக்கில் இணைகிறது கிரிக்கெட்?? – ஐசிசி பேச்சுவார்த்தை
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (13:15 IST)
2028ல் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விலையாட்டையும் சேர்க்க வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் வாரியம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் கிரிக்கெட் பல கோடி ரசிகர்களை பெற்றிருந்தாலும் ஒலிம்பிக் அளவுக்கு உலக புகழ் பெற்றதாக அது இல்லை. பலவிதமான விளையாட்டுகளின் சங்கமமாக திகழும் ஒலிம்பிக் போட்டியை காணவும், பங்கு பெறவும் உலகத்தின் பல நாடுகளும் போட்டி போடுகின்றன. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது ஒரு இமாலய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுடன் கிரிக்கெட் விளையாட்டை இணைப்பதன் மூலம் கிரிக்கெட்டின் மதிப்பு இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவர் மைக் கேட்டிங் “ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஒலிம்பிக் போட்டிகள் இரண்டு வாரங்களே நடைபெறும் என்பதால் அதற்கு ஏற்றவாறு திட்டமிட வேண்டிய சிக்கல்கள் உள்ளது. கிரிக்கெட் நீடித்து இருக்க அது ஒலிம்பிக்கில் இடம் பெற்றாக வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் அனைத்து நாட்டு மக்களும் தங்கள் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்களை கிரிக்கெட் விளையாட ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியல் – ஜப்பான் பெண் முதலிடம்