Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு இந்திய வீரர் கூட இல்லை; அதிர்ச்சியளிக்கும் ஐசிசி விருதுகள் பரிந்துரை!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (10:25 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி ஆண்டுதோறும் நடக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை கணக்கிட்டு சிறந்த வீரர்கள், வீராங்கணைகளுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது பெற தகுதியான வீரர்களின் பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் ஆண்களுக்கான ஒருநாள் போட்டி தொடரில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், தென்னாப்பிரிக்க வீரர் மலன், நெதர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல ஆண்களுக்கான டி 20 போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர், பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், இலங்கையின் ஹசரங்கா, ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த பரிந்துரை பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இல்லாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments