Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி இருக்கிறார் சவுரவ் கங்குலி..? – மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:40 IST)
பிசிசிஐ தலைவர் கங்குலி கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் ஒமிக்ரான் வேரியண்ட் பாதிப்புகள் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கங்குலியின் உடல்நலம் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் “பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் நேற்று மாலை சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவருக்கு ‘மோனோ க்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் தெரபி” என்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments