Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர் தான் ஹீரோ- யுவராஜ் சிங்

Sinoj
புதன், 17 ஜனவரி 2024 (18:27 IST)
என்வாழ்க்கை வரலாறு படத்தில் இவர் தான்  ஹீரோவாக நடிக்க வேண்டும் என யுவராஜ்  சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  யுவராஜ் சிங். அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்த இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார்.

இவர், 132 ஐபில்  போட்டிகளில் விளையாடி 750 ரன்களும் குவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு யுவராஜ் சிங் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். வெளி நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் யுவராஜ் சிங் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கும் வேலைகள் நடந்து வருகிறது.

எனவே இதுகுறித்து, யுவராஜ் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இப்படத்தில்,  யார் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

அதில்,  ''சமீபத்தில் அனிமல் திரைபடம் பார்த்தேன். இப்படத்தில் நடித்த ரன்பீர் கபூரின் நடிப்பை கண்டபின், எனது வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்தால் திரையில் என்னை வெளிப்படுத்த அவர்தான் பொருத்தமாக இருப்பார்..ஆனால், இயக்குனரின் முடிவை பொருத்து அது உள்ளது. இதுகுறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதுபற்றி அறிவிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments