Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 ஓவர்களில் 101 ரன்களைக் கொடுத்த இரண்டு பவுலர்கள்… கடுப்பான ரசிகர்கள்!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (09:19 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 208 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ஆஸி அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 200 ரன்களுக்கும் மேல் சேர்த்தும் சொந்த மண்ணில் அதை கோட்டை விட்டுள்ள நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த போட்டியில் இந்திய அணியின் இரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் சேர்ந்து 101 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். இது போட்டியில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இது குறித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ‘நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை’ என்று கூறியது கவனத்தில் கொள்ளத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments