Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையைக் கிளப்பிய ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்… அம்பயர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (10:03 IST)
நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் அவுட் ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் இடையே சர்ச்சையைக் கிளப்பியது.

நேற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் நியுசிலாந்து அணியின் பிரேஸ்வெல் ஆகியோரின் சிறப்பான சதம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.  மிட்செல் வீசிய பந்தில் ஹர்திக் பாண்ட்யா பவுல்ட் ஆனதாக அப்பீல் கேட்கப்பட்டது. விக்கெட் கீப்பர் டாம் லாதம்மின் கையுறை ஸ்டம்ப்பை ஒட்டி இருந்ததால் சந்தேகமடைந்த நடுவர் மூன்றாம் நடுவரிடம் ஆலோசனைக் கேட்டார். டி வி ரிப்ளேயில் பந்து ஸ்டம்ப்புக்கு மேலாக சென்றது தெளிவாக தெரிந்தது. அனால் கீப்பரின் கையுறை ஸ்டம்புக்கு பின்னால் இருந்ததாக தெரிவித்த நடுவர், சந்தேகத்தின் பலனை பவுலருக்கு வழங்கி விக்கெட் என அறிவித்தார். நடுவரின் இந்த முடிவு தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை போட்டி.. சூப்பர் 6 சுற்றுக்கு இந்திய அணி தகுதி..!

ரஞ்சி கோப்பை போட்டியிலும் சொதப்பிய ரோஹித்… ரசிகர்கள் அதிருப்தி!

எனக்கு 10க்கு 7 மதிப்பெண்தான் கொடுப்பேன்- ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!

ஹர்திக் பாண்ட்யாவால் எனக்கு கூடுதல் அனுகூலம் கிடைத்துள்ளது.. கேப்டன் சூர்யகுமார் யாதவ் கருத்து!

ஐசிசி தலையீட்டால் இறங்கி வந்த பிசிசிஐ… ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்க சம்மதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments