Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

vinoth
புதன், 1 மே 2024 (07:55 IST)
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி மிகவும் லோ ஸ்கோர் போட்டியாக இருந்தாலும் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அந்த அணியின் நெகல் வதேரா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் முறையே அதிகபட்சமாக 46 மற்றும் 35 ஆகிய ரன்களை சேர்த்தனர்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 145 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. அரைசதம் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார் மார்கஸ் ஸ்டாய்னிஸ்.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “பவர்ப்ளேயில் விக்கெட்களை இழந்த பின்னர் எங்களால் மீண்டு வரமுடியவில்லை. அதுவே தோல்விக்குக் காரணமாக அமைந்தது. இந்த சீசன் முழுவதும் பேட்டிங்கில் இந்த பிரச்சனை உள்ளது. ஆடுகளத்தில் கால் வைக்கும் போதே வெற்றி தோல்வி இரண்டுமே கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் நாம் ஒவ்வொரு போட்டியிலும் போராட வேண்டும். இந்த போட்டியில் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம். நெஹல் வதேரா சிறந்த பேட்ஸ்மேன். அணியின் காம்பினேஷன் காரணமாகதான் அவரை முதல் சில போட்டிகளில் இறக்க  முடியவில்லை. அவர் மும்பை இந்தியன்ஸ்க்காக பல ஆண்டுகள் விளையாடுவார். இந்திய அணிக்காகவும் விளையாடுவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓராண்டுக்குப் பிறகு நாளை கிரிக்கெட் களம் காண்கிறார் ஷமி!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக முடிவு?

ஆஸ்திரேலிய தொடர்… கோலியின் முகத்தை முன்னிலைப் படுத்தும் ஆஸி ஊடகங்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!

சி எஸ் கே அணி என்னை எடுக்கும் என்று நம்புகிறேன்… வெளிப்படையாகக் கேட்ட தீபக் சஹார்!

அடுத்த கட்டுரையில்
Show comments