Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

vinoth
சனி, 6 ஜூலை 2024 (07:22 IST)
நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்திறன் அமைந்தது.

இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஹர்திக் பாண்ட்யா. மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஆக்கியதும் ரசிகர்களுக்கு அவர் மேல் கோபம் வர காரணமாக அமைந்தது. ஆனால் உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் தன்னை வெறுத்தவர்களை கூட நேசிக்க வைத்துவிட்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடி உடனான கலந்துரையாடலின் போது பேசிய அவர் “கடந்த 6 மாதங்களாக என் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தேன். சொந்த நாட்டு மக்களே என்னை வெறுத்தார்கள். அவர்களுக்கு என் விளையாட்டின் மூலமாக பதில் சொல்லவேண்டும் என நினைத்தேன். அதற்காக உழைக்கவேண்டும் என்றும், வலிமையாக இருக்கவேண்டும் எனவும் நினைத்தேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவாஸ்கர் அப்படி பேசியிருக்கக் கூடாது… ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ஆஸி.வீரர்!

அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகள் விளையாட தடை… நடவடிக்கை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வாரியம்!

அந்த நாலு செல்லத்தையும் எப்படியாவது எடுத்துடுங்க… ஆர் சி பி அணிக்கு டிவில்லியர்ஸ் அறிவுரை!

கேப்டனிடம் கோபித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஸாரி ஜோசப்!

ரோஹித் இல்லைன்னா முழுத் தொடருக்கும் பும்ராவே கேப்டனாக செயல்படணும்… கவாஸ்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments