Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரன்கள் கொடுப்பது சாதாரணம்தான்… ஆனால் இந்த தவறு? – தோல்விக்குப் பின் ஹர்திக் பாண்ட்யா!

Advertiesment
இந்தியா
, வெள்ளி, 6 ஜனவரி 2023 (08:33 IST)
நேற்றைய இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததன் மூலம் தொடர் சமனாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது . இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது மட்டும் இல்லாமல் நோ பால்களையும் வீசினர்.

தோல்விக்குப் பின்னர் இதுபற்றி பேசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “பவுலர்கள் ரன்கள் அதிகமாக கொடுத்தது கூட ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால் நோ பால்களை வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த போட்டியை வென்றிருந்தால், அடுத்த போட்டியை எந்த அழுத்தமும் இல்லாமல் எதிர்கொண்டு விளையாடி இருப்போம்” எனக்  கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ஓவர்களில் 5 நோ பால்கள்: இந்திய வீரருக்குக்கு குவியும் கண்டனங்கள்