Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நிறைய கேள்விகள்… ஆனால் பதில் இல்லை” – தோல்வி குறித்து ஹர்திக் பாண்ட்யா!

vinoth
சனி, 4 மே 2024 (07:36 IST)
ஐபிஎல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன் படி களமிறங்கிய கே கே ஆர் அணி வெங்கடேஷ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரின் நிதான ஆட்டத்தால் 169 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியில் பும்ரா மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து எளிய இலக்கை துரத்தி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அதிர்ச்சியளிக்கும் விதமாக விளையாடி 145 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “எங்களால் சரியான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. ஆரம்ப ஓவர்களிலேயெ விக்கெட்களை பறிகொடுத்தோம். அடுத்தடுத்து விக்கெட்களை இழக்கும்போது ஏராளமான கேள்விகள் மனதிற்குள் தோன்றின. ஆனால் அதற்கான பதில்கள் இப்போது இல்லை. இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். பவுலர்கள் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார்கள். ஆனால் நாங்கஸ் சேஸ் செய்வதில் தவறு செய்துவிட்டோம். இந்த தோல்விக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும். கடினமான நாட்கள் வரலாம். ஆனால் மகிழ்ச்சியான நாட்கள் அருகில்தான் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. ஆடும் லெவன் விவரங்கள்..!

கோலியைக் காப்பி அடிக்கிறார் ஷுப்மன் கில்… முன்னாள் வீரர் விமர்சனம்!

திடீரென ரசிகர்களை இழக்கும் ஆர் சி பி அணி… பின்னணி என்ன?

இன்றைய போட்டியில் பண்ட் கீப்பிங் செய்வாரா?.. வெளியான தகவல்!

மீண்டும் ஒரு மைல்கல் சாதனை… மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் அற்புதம் நிகழ்த்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments