Publish Date: Thu, 17 Mar 2022 (17:18 IST)
Updated Date: Thu, 17 Mar 2022 (17:20 IST)
காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்திக் பாண்ட்யா நேற்று பெங்களூருவில் யோ யோ தேர்வில் கலந்துகொண்டுள்ளார்.
இந்திய அணியில் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யா சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அணியில் அவருக்கான இடம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரவிந்தர ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர்கள் போட்டியில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவதைப் பொறுத்தே இந்திய அணியில் அவர் இடம் தீர்மானிக்கப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் நேற்று பெங்களூருவில் அவர் உடல்தகுதி தேர்வான யோ யோ டெஸ்ட்டில் கலந்துகொண்டு தன்னுடைய உடல்தகுதியை நிரூபித்துள்ளார். இந்த தேர்வில் வெற்றி பெற 16.5 புள்ளிகள் பெறவேண்டும். ஹர்திக் பாண்ட்யா 17 புள்ளிகள் பெற்றதாக சொல்லப்படுகிறது. தேர்வில் அவர் பந்துவீசியதும் குறிப்பிடத்தக்கது.
webdunia
Publish Date: Thu, 17 Mar 2022 (17:18 IST)
Updated Date: Thu, 17 Mar 2022 (17:20 IST)