Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடைசி 2 போட்டிகள்… இவர்தான் கேப்டனா?

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (09:25 IST)
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. இதில் சமீபத்தில் முடிந்த மூன்றாவது போட்டியில் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா திடீரென முதுகுப் பிரச்சனை காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். முன்னதாக் அணியின் பிஸியோ வந்து அவரோடு ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வெளியேறினார்.

போட்டி முடிந்த பின்னர் முதுகுப்பிரச்சனை குறித்து பேசிய ரோஹித் ஷர்மா “இப்போது பரவாயில்லை.அடுத்த போட்டிகளுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. அதற்குள் முழுவதுமாக குணமாகிவிடுவேன் என நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார். ஆனால் ஆசியக்கோப்பை மற்றும் டி 20 உலகக்கோப்பை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அவர் கடைசி 2 போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா விளையாடாத பட்சத்தில் இந்திய அணிக்கு யார் தலைமை தாங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பட்டியலில் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரின் பெயர் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஹர்திக் பாண்ட்யாவுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments