இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு பயிற்சியாளர்கள் தேவை என்ற கருத்தை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அணியின் மீதும் பயிற்சியாளர் டிராவிட் மீதும் வைத்தனர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு டிராவிட் பயிற்சியாளராக செயல்படவேண்டும் என்றும் டி 20 போட்டிகள் பற்றி பெரிதாக ஐடியா இல்லாத அவருக்கு பதில் வேறு யாரேனும் பயிற்சியாளராக நியமிக்கப்படவேண்டும் எனவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
அதில் “இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் இருக்கும் போது இரண்டு பயிற்சியாளர்கள் இருந்தால் என்ன தவறு. இங்கிலாந்து அணிக்கு ஆக்ரோஷமான பயிற்சியாளராக மெக்கல்லம் இருப்பது போல இந்திய டி 20 அணிக்கு ஆஷிஷ் நெஹ்ரா அல்லது விரேந்திர சேவாக் செயல்படலாம்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.