Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் அவரை விட சிறந்த சுழல்பந்து வீச்சாளர் இல்லை… ஹர்பஜன் பாராட்டிய பவுலர்!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (13:52 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்த் தொடரில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் இடம்பெறவில்லை. இது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவரே டிவிட்டரில் எமோஜிக்கள் மூலமாக தெரிவித்துள்ளார். அதில் விடியலுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சஹால் அணியில் இடம்பெறாதது குறித்து பேசியுள்ள இந்திய ஹர்பஜன் சிங் “அணியில் சஹால் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். அவரை விட சிறந்த ஒரு சுழல்பந்து வீச்சாளர் இந்திய அணியில் தற்போது இல்லை. அவர் ஒரு மேட்ச் வின்னர். அவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TNPL கோப்பையை வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி!

எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இளம் இந்திய அணி படைத்த சாதனைகளின் லிஸ்ட்!

என் சகோதரிக்கு புற்றுநோய்.. ஒவ்வொரு பந்தையும் அவரை நினைத்து தான் போட்டேன்: ஆகாஷ் தீப்

ஆகாஷ் தீப் செய்த அற்புத சாதனை.. 49 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

முதல் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி.. 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments