இஸ்ரோ - உலகக்கோப்பையை ஒப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி ட்வீட்..!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (08:08 IST)
இஸ்ரோவின் சாதனையையும் உலகக்கோப்பை கிரிக்கெட்டையும் ஒப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
2019 ஆம் ஆண்டு இஸ்ரோ, சந்திராயன் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. ஆனால் அந்த விண்கலம் கடைசி நேரத்தில் தோல்வி அடைந்தது. அதேபோல் தான் 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கடைசி நேரத்தில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது. 
 
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு இஸ்ரோ, சந்திராயன் 3 விண்கலத்தை அனுப்பி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்து ட்வீட் செய்துள்ளது.
 
இஸ்ரோவையும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி ட்வீட் செய்துள்ளது. இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments