Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி மற்றும் ராகுல் மனைவி பற்றி ஹர்பஜன் சிங் அடித்த கமெண்ட்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (08:16 IST)
கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாகக் கோப்பையை வென்றது.

இந்த போட்டியின் போது கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் பேட் செய்துகொண்டிருந்த போது இந்தி வர்ணனையில் ஈடுபட்டிருந்தா ஹர்பஜன் சிங் அடித்த கமெண்ட் ஒன்று சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவர்கள் இருவரும் பேட் செய்த போது அவர்களின் மனைவியரான அனுஷ்கா சர்மா மற்றும் அதியா ஷெட்டி ஆகியோரைக் கேமரா காட்டியது. அவர்கள் இருவரும் தீவிரமாக எதையோ  விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பேசிய ஹர்பஜன் “அவர்கள் இருவரும் கிரிக்கெட் பற்றி பேசுகிறார்களா அல்லது சினிமா பற்றி பேசுகிறார்களா என தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் பற்றி பெரிதாக எதுவும் தெரிந்திருக்காது என நினைக்கிறேன்.” எனக் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பல நெட்டிசன்கள் ஹர்பஜனின் இந்த கருத்து பெண் வெறுப்புக் கருத்து என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments