இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை… வெளுத்து வாங்கிய சுனில் கவாஸ்கர்!

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை… வெளுத்து வாங்கிய சுனில் கவாஸ்கர்!

Advertiesment
இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை… வெளுத்து வாங்கிய சுனில் கவாஸ்கர்!
, வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:20 IST)
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அடுத்து இப்போது 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வந்த நிலையில் அதை 3-2  என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தொடர் தோல்வியின் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் இந்திய அணி ஒரு தொடரை இழந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பேசிய முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் “இரண்டு முறை டி 20 உலகக் கோப்பை வென்ற பலமான வெஸ்ட் இண்டீஸிடம் இந்திய அணி தோற்றதில் அவமானம் ஒன்றும் இல்லை.

ஆனால் சில இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை. அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோடிகளில் புரள்கிறார்கள். அங்கே தங்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டுமென்றுதான் விரும்புகிறார்கள். அண்டர் 19 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் சில இளம் வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடும் போது சொதப்புவதை நாம் பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் களத்தில்… பேட் செய்த ரிஷப் பண்ட்… வைரலாகும் வீடியோ!