Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணித் தக்கவைக்கும்- கம்பீர் நம்பிக்கை!

vinoth
வியாழன், 2 ஜனவரி 2025 (09:19 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸி அணி முன்னிலை வகிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு கடைசி போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது என்பதால். நாளைத் தொடங்கவுள்ள போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்த போட்டியை தோற்றால் இந்திய அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஐந்தாவது டெஸ்ட்டை வென்று தொடரை சமன் செய்தால் கோப்பையை இழக்காது. இதனால் இந்திய அணி இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டும்.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாகப் பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ”ஐந்தாவது போட்டியை வென்று இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணித் தக்கவைக்கும்- கம்பீர் நம்பிக்கை!

இரண்டு வாரங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வினோத் காம்ப்ளி!

சிட்னி டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

கோலி இடத்தில் நிதீஷ்குமார் இறங்க வேண்டும்… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கருத்து!

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

அடுத்த கட்டுரையில்
Show comments