Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஷான் கிஷானா? கே எல் ராகுலா? – கௌதம் கம்பீர் பரிந்துரைக்கும் வீரர்!­

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (09:48 IST)
ஆசியக்கோப்பை தொடர் இலங்கையில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இதன் தகுதி சுற்று ஆட்டங்களில் முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதியுடன் நிறுத்தப்பட்டு புள்ளிகள் பிரித்து அளிக்கப்பட்டன.

இதையடுத்து நாளை சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான போட்டி நடக்கிறது. இந்த போட்டிககான அணியில் ஆடும் லெவனில் இஷான் கிஷான் அல்லது கே எல் ராகுலில் யாரை விளையாட வைக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் கம்பீர் “கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அவரை அணியில் இணைக்க, இஷான் கிஷானை நீக்கிவிடக் கூடாது. இஷான் கிஷான் தான் அணியில் இருக்க வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். அணிக்குள் திறமையான ஒரு வீரரா அல்லது மூத்த வீரரா என்பதை அணிதான் முடிவு செய்யவேண்டும். ” என இஷான் கிஷானுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments