Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது ஒரு அணியே கிடையாது… வீரர்களுக்குள் ஆதரவே இல்லை- பாக் பயிற்சியாளர் புலம்பல்!

Advertiesment
பாபர் ஆசாம்

vinoth

, செவ்வாய், 18 ஜூன் 2024 (06:56 IST)
நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும் தோற்றது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. அணிக்குள் வீரர்கள் பாபர், ரிஸ்வான் மற்றும் ஷாகீன் அப்ரிடி ஆகியோரின் தலைமையில் குழுவாக பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் “பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமையே இல்லை. இது ஒரு அணியே கிடையாது. வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில்லை. அனைவரும் தனித்தனியாக உள்ளனர். எத்தனையோ அணிகளோடு பணியாற்றியுள்ளேன். ஆனால் இதுபோல ஒரு அணியை நான் பார்த்ததில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!