Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்கள் இப்படிதான் தேர்வு செய்யப்பட வேண்டும்… யோ யோ டெஸ்ட் வைத்தல்ல – கம்பீர் கருத்து!

vinoth
சனி, 15 ஜூன் 2024 (07:20 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனப் பேசியுள்ளார். இதன் மூலம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவர் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்படும் விதம் குறித்து பேசியுள்ளார். அதில் “வீரர்கள் திறமை, அவர்களின் பேட்டிங் செயல்பாடு மற்றும் பவுலிங் செயல்பாடு ஆகியவற்றை வைத்து மட்டும்தான் தேர்வு செய்யப்படவேண்டும். யோ யோ டெஸ்ட் முடிவுகளை வைத்தல்ல” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக இந்திய அணி வீரர்கள் யோ யோ டெஸ்ட் முடிவுகளின் படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments