Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பீர் அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு எங்களுக்காக உழைத்தார்… KKR அணி வீரர் நெகிழ்ச்சி!

கம்பீர் அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு எங்களுக்காக உழைத்தார்… KKR அணி வீரர் நெகிழ்ச்சி!

vinoth

, செவ்வாய், 18 ஜூன் 2024 (07:39 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனப் பேசியுள்ளார். இதன் மூலம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கம்பீர் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக சொல்லப்படும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கேகேஆர் அணியில் இடம்பெற்று இந்த ஆண்டு சிறப்பாக பந்துவீசியும் சர்ச்சைகளில் சிக்கியும் பிரபலம் ஆன பவுலர் ஹர்ஷித் ராணா பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அதில் “கம்பீர், தன்னுடைய அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் விட்டுவிட்டு எங்கள் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என இரவு பகலாகக் கடுமையாக உழைத்தார்” எனக் கூறியுள்ளார்.

 ஐபிஎல் நடந்த சமயத்தில்தான் இந்தியாவில் தேர்தலும் நடந்தது. அப்போது தான் சார்ந்த கட்சிக்காக கம்பீர் எந்த பிரச்சாரமும் செய்யாமல் ஐபிஎல் அணியின் ஆலோசகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு ஓவரில் 36 ரன்கள் கொடுத்த ஆப்கானிஸ்தான் பவுலர்!