Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரியுற தீயில எண்ணெய ஊத்திட்டானுங்க.. கம்பீர் அருகே கோலி கோலி எனக் கத்திய ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (09:07 IST)
லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர்.  பின்னர் கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி பிரித்து அழைத்துச் சென்றனர்.

இருவரும் வாக்குவாதத்தின் போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன்படி கோலியிடம் கம்பீர், “நீ என் அணி வீரர்களை அவதூறாக பேசியுள்ளாய். இந்த அணி என்பது என் குடும்பம் போன்றது. உன் வார்த்தைகள் என் குடும்பத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது” எனக் கூற, அதற்கு கோலி “உங்கள் குடும்பத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இந்த பிரச்சனை பற்றிய விவாதங்கள் ஓயாத நிலையில் இப்போது கம்பீரை மேலும் கோபமூட்டும் விதமாக சில ரசிகர்கள் நடந்து கொண்டது எரிகின்ற தீயில் எண்ணெய் ஊத்தியது போல ஆகியுள்ளது. சமீபத்தில் லக்னோ அணி சென்னை அணியை எதிர்கொனட போட்டியின் போது கம்பீர் மைதானத்தின் கேலரியில் நடந்து சென்ற போது சில ரசிகர்கள் வேண்டுமென்றே போட்டிக்கு சம்மந்தமே இல்லாமல் ‘கோலி கோலி’ என கோஷமிட்டனர். அதைக் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்த கம்பீர், கோஷமிட்டவர்களை பார்த்துவிட்டு எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் கிளம்பினார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cricket Addictor (@cricaddictor)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

வாழ்க்க ஒரு வட்டம்… மீண்டும் சி எஸ் கே அணியில் இணைந்தது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments