Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக பிரபல வீரர் நியமனம்!

Advertiesment
Malinga
, வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:04 IST)
அடுத்தாண்டு வரவுள்ள ஐபிஎல் சீசனில் மும்பை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கோடை காலத்தில்  ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் உலகம் முழுவதும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளைக் காண உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்தாண்டு வரவுள்ள ஐபிஎல் சீசனில் மும்பை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த 2008, 2017, 2019, 2020 ஆகிய ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். மும்பை அணி கோப்பை வென்ற 4 முறையும் லசித் மலிங்கா  அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்பார்த்தது போலவே இமாலய இலக்கு.. பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா?