Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா சிறந்த அணி என்றால்… இதை செய்ங்க –சவாலுக்கு அழைக்கும் முன்னாள் பாக். வீரர்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (14:10 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது நாளிலேயே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், அதன் பின்னர் நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டிதான் இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது. ஆனால் அந்த போட்டி கூட ஒரு தலைபட்சமாக உப்புச்சப்பில்லாமல் இந்தியாவின் ஆதிக்கத்தோடுதான் நடந்து முடிந்தது. பல முன்னாள் வீரர்கள் இந்தியாவுக்கு சமமான வலுவான அணியாகப் பாகிஸ்தான் இல்லை எனக் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர் சக்லைன் முஷ்டாக் சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில் “இந்தியா பலமிக்க அணி என்றால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் பாகிஸ்தானுடன் 10 போட்டிகள் மோதட்டும். அதன் பின்னர் எந்த அணி சிறந்தது என்பது தெரிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாதங்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் பதிவிட்ட RCB நிர்வாகம்!

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments