Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (07:44 IST)
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. தற்போது டி 20 தொடர் நடந்து வரும் நிலையில் அடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளன.

இதையடுத்து இந்திய அணி இங்கிலாந்து அணியோடு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளது. அதற்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் மூட்டுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இடம்பெற்றுள்ளார். அவர் இந்திய தொடருக்கு  முன்பாக முழுவதும் குணமாகிவிடுவார் என சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் அணி : பென் ஸ்டோக்ஸ் ( கேப்டன்), ரேஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன்,கெஸ் அட்கின்சன், ஜானி பாரிஸ்டோ, சோயிப் பஷிர், ஹாரி புருக், ஷாக் கிராலி, பென் டக்கட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி..! தேசிய கொடியை ஏந்துகிறார் பி.வி சிந்து..!!

ஒரு போட்டியில் கூட விளையாடதவர்களுக்கு ரூ.5 கோடி.. பரிசுப்பணம் ரூ.125 கோடியை பிரித்தது எப்படி?

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

நான் இதனால்தான் ஓய்வெடுத்தேன்… என்னைப் புரிந்துகொள்ளவில்லை – இஷான் கிஷான் அதிருப்தி!

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments