Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர், ராஜஸ்தான் அணிகளுக்கு பின்னடைவு…விடைபெற்ற இங்கிலாந்து வீரர்கள்!

vinoth
செவ்வாய், 14 மே 2024 (07:12 IST)
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முதலாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். இதற்கான 15 பேர் கொண்ட அணியை அனைத்து அணிகளும் அறிவித்துவிட்டன.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி தாயகம் திரும்புகின்றனர். தற்போது லீக் சுற்று போட்டிகளின் இறுதிகட்ட போட்டிகள் நடந்து வரும் நிலையில் இது ஆர் சி பி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆர் சி பி அணியில் வில் ஜாக்ஸ் மற்றும் ராஸ் டீப்ளே ஆகியோரும், ராஜஸ்தான் அணியில் இருந்து ஜோஸ் பட்லரும், சென்னை அணியில் இருந்து மொயின் அலியும் இங்கிலாந்து திரும்பியுள்ளனர். பஞ்சாப் அணியில் இருந்து சாம் கரண், ஜானி பேர்ஸ்டோ மற்றும் லியான் லிவிங்ஸ்டன் ஆகியோர் கிளம்பியுள்ளனர். ஆனாலும் அந்த அணி ப்ளே ஆஃப் ரேஸில் இல்லை என்பதால் அவர்களுக்கு பெரிய பாதிப்பில்லை. அதுபோல ஏற்கனவே ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்ட கொல்கத்த அணியில் இருந்து ஃபில் சால்ட் இங்கிலாந்து திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் அதிக டார்கெட் இதுதான்.. இந்தியா சாதனை..!

உலகக்கோப்பை பெற்று கொடுத்தவுடன் ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments