Publish Date: Tue, 13 Dec 2022 (08:32 IST)
Updated Date: Tue, 13 Dec 2022 (08:24 IST)
லண்டனில் உள்ள ஓவல் மைதானம் பனிப்பொழிவு காரணமாக முழுவதும் பனியால் சூழப்பட்டு வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.
இங்கிலாந்தின் லண்டன் நகரம் முழுவதும் இப்போது கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதன் காரணமாக லண்டன் நகர் முழுவதும் பனிப்போர்வை சூழ்ந்துள்ளது. மேலும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தின் ஓவல் மைதானம் முழுவதும் பனியால் சூழப்பட்டு வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.