Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 போட்டிகளில் ஜோஸ் பட்லர் படைத்த மைல்கல்… இங்கிலாந்தின் முதல் வீரர்!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (07:32 IST)
டி 20 போட்டிகளின் வரவால் கிரிக்கெட்டின் போக்கே மாறியுள்ளது. இதனால் அதிகளவில் சர்வதேச மற்றும் உள்ளூர் டி 20 போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரசிகர்களும் டி 20 போட்டிகளையே அதிகமாக பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்தின் உள்ளூர் அணிகளான டெர்பிஷையர் ஃபால்கன்ஸ், லங்காஷையர் அணிகளுக்கு இடையிலான டி20 லீக் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இங்கிலாந்து டி 20 அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் டி 20 போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார்.

உலகளவில் இந்த சாதனையைப் படைக்கும் 9 ஆவது வீரராக ஜோஸ் பட்லர் உள்ளார். ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்பத்தை அழைச்சிட்டு வரக் கூடாது.. ஸ்லீவ்லெஸ் போடக் கூடாது! - ஐபிஎல் வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள்?

இதனால்தான் விராட் கோலி அபூர்வம்.. பாராட்டித் தள்ளிய ரிக்கி பாண்டிங்!

ஒரே பிட்ச்சில் விளையாடுவது சாதகமான அம்சம்தான்… கம்பீர் கருத்துக்கு எதிராக பேசிய ஷமி!

ஒரே க்ரவுண்டுல விளையாடினா மட்டும் பத்தாது.. திறமையும் இருக்கணும்! - இந்திய அணி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!

யாரும் செய்யாத சாதனை! வாய்ப்பு தருமா பிசிசிஐ? இறுதிப் போட்டியில் இடம்பெறுவாரா வருண் சக்ரவர்த்தி?

அடுத்த கட்டுரையில்
Show comments