Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூட் இருந்துருந்தா கதையே வேற.. சொதப்பலாச்சு! – இங்கிலாந்து கேப்டன் வருத்தம்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (12:15 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியில் வாய்ப்புகள் இருந்து தோல்வியை தழுவி விட்டதாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 317 ரன்கள் பெற்று 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி நல்ல ஸ்கோர் செய்திருந்த நிலையில் இரண்டாவதாக பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து ஆரம்பத்தில் நல்ல ஓபனிங் செய்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இந்நிலையில் இங்கிலாந்தின் தோல்வி குறித்து பேசியுள்ள கேப்டன் மார்கன் “இந்த போட்டியில் நாங்கள் நிறைய தவறு செய்துவிட்டோம். புனே பிட்ச் சாதகமாக இருந்தும், வீரர்கள் சிறப்பாக விளையாடியும் சில இடங்களில் தவறுகள் ஏற்பட்டன. ஜோ ரூட் இருந்திருந்தால் அணிக்கு அது பக்கபலமாக இருந்திருக்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

ஒரு ஓவரில் 45 ரன்கள்: ஆப்கான் வீரர் உஸ்மான் கனியின் உலக சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments