ஆஷஸ் தொடர்… இரண்டாவது நாளில் அதிரடி காட்டிய இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (09:28 IST)
நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் ஆஸி அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தின் மூலம் 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தங்கள் அதிரடி ஆட்டமான பாஸ்பால் ஆட்டமுறையை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஸாக் கிராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட்ர் 98 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 278 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஹேரி ப்ரூக் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணி ஆஸி அணியை விட 138 ரன்கள் பின் தங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவரின் அவுட் தீர்ப்பு குறித்த சர்ச்சை.. விராத் கோலியின் ஆவேசத்தால் பரபரப்பு..!

244 ரன்கள் டார்கெட் கொடுத்தாலும் SRHக்கு பத்தாது.. பரிதாபமாக தோல்வி அடைந்த MI..!

6 பந்துகளில் 6 விக்கெட்.. எலக்ட்ரீஷியன் வேலைக்கு லீவு போட்டு கிரிக்கெட் விளையாடியவரின் சாதனை..!

தோல்வியே காணாத பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான்.. 16 பந்தில் 43 ரன்கள் அடித்த வைபவ்..!

ஒலிம்பிக் பதக்க வீராங்கனைக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் என்ன பிரச்சனை? நெட்டிசன்கள் கொதிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments