Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவிற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்! – ட்வெய்ன் ப்ராவோ உருக்கம்!

Advertiesment
Dwayne Bravo
, புதன், 8 டிசம்பர் 2021 (13:05 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான ட்வெய்ன் ப்ராவோ இந்தியா தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான ட்வெய்ன் ப்ராவோ பல்வேறு சர்வதேச ஒருநாள், டி20 உள்ளிட்ட போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏலத்தில் சிஎஸ்கே அணியிலிருந்து ப்ராவோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் ஐபிஎல் ஏலத்தில் தொடர்ந்து இருப்பதால் சிஎஸ்கேவால் மீண்டும் ஏலத்திற்கு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுடனான தனது அனுபவம் குறித்து பேசியுள்ள ட்வெய்ன் ப்ராவோ “இந்தியா என்னை ஒரு பிராண்ட் ஆக மாற்றியது. இந்தியா இன்றி என் மதிப்பு பாதியாகதான் இருந்திருக்கும். எனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள நாட்டில் ஒரு பெரிய நிலையை கொண்டிருப்பதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நிச்சயமாக இந்தியா என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனா குளிர்கால ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு!!