Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ட்ரீமிங் வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா நியுசிலாந்து போட்டி!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (11:23 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்று முன்தினம் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணியின்  மிட்செல் மிக அபாரமாக விளையாடி சதமடித்தார்.  அவருக்கு உறுதுணையாக ரச்சின் ரவிந்தரா அரைசதம் அடித்தார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணி சீரான் இடைவெளிகளில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தன. ஆனால் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலி 95 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் 95 ரன்களில் இருக்கும் போது அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது, அவரின் சதத்துக்கும் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிக்ஸ் அடிக்க முயன்ற கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியுசிலாந்தை வென்றது. 

இந்த போட்டி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளது. இந்த போட்டியில் கோலி சதத்தை நெருங்கும் போது 4.3 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர். இதுவரை எந்தவொரு போட்டியையும் இவ்வளவு ரசிகர்கள் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments