Publish Date: Tue, 08 Feb 2022 (16:27 IST)
Updated Date: Tue, 08 Feb 2022 (16:29 IST)
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் சி எஸ் கே வில் விளையாடுவது குறித்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இந்த ஆண்டு மெகா ஏலம் என்பதால் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மற்ற எல்லோரையும் ஏலத்தில் விட்டுள்ளனர். அதனால் இந்த ஆண்டு ஏலம் வீரர்களையும் அணிகளையும் மாற்ற உள்ளது.
இதில் சென்னையைச் சேர்ந்தவரான தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவது குறித்து பேசியுள்ளார். இதுவரை மும்பை, கொல்கத்தா போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ள அவர் நான் சென்னையைச் சேர்ந்தவன். அதனால் சி எஸ் கே அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் எனக் கூறியுள்ளார்.